அதி வேகத்தில் பரவும்.. ஆனா இன்னும் ஆரம்பிக்கல.. BF.7 தொற்று… உஷாரா இருங்க..!

சீனாவில் உருமாறிய BF.7 ஒமிக்ரான் வகை வைரஸால் மற்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. சீனாவை அடுத்து ஜப்பான், அமெரிக்கா, ரிப்பப்ளிக் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளில் BF.7 ஒமிக்ரான் வகை தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவிலும் இதுவரை 3 பேருக்கு உருமாறிய வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் மிக தீவிரமாக பரவக்கூடியது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இது கொரோனா முதல் அலையை நினைவுபடுத்துவதாகவே உள்ளது. இந்த நிலையில், BF.7 ஒமிக்ரான் வகை வைரஸ் அண்டை மாநிலங்களில் பரவி வரும் எதிரொலியாக, இந்தியாவில் இதற்கு பிறகு கண்டறியப்படும் கொரோனா வழக்குகளின் மாதிரிகளை INSACOG ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே கோவிட் தடுப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை நடந்தது. அதற்கு பிறகு ட்வீட் போட்ட மாண்டவியா, இந்தியாவில் இதுவரை BF.7 ஒமிக்ரான் தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கோவிட் ஒட்டுமொத்தமாக அதிகரிக்கவில்லை. இருப்பினும், தற்போதுள்ள மற்றும் வளர்ந்து வரும் மாறுபாடுகளைக் கண்காணிக்க தொடர்ந்து கண்காணிப்பு தேவை. கோவிட் இன்னும் முடியவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த முறை உருவான SARS COV 2 வின் ஒரு குடும்ப மரத்தின் தண்டு மற்றும் கிளைகள் மற்றும் துணை கிளைகளாக மாறுபட்டு BF.7 பரவ தொடங்கியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸின் அறிகுறிகளும் இதற்கு முந்தைய தொற்றுகளில் ஒன்றுடன் ஒன்றாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். இதனிடையே வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும் போது கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என்றும் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்படவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.