நியூஸ் 7 டிவியில் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு!

தமிழகத்தின் தலைசிறந்த பிசினஸ்மேன்களுக்கு நாணயம் விகடன் வார இதழ் ஆண்டுதோறும் வழங்கிவரும் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த 16-ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நியூஸ் 7 சானலில் ஒளிபரப்பாக இருக்கிறது.

பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் – 2022 நிகழ்ச்சியில் ஏழு தொழில்முனைவோர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவுக்குத் தலைமை தாங்கி பேசினார் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் த.மோ.அன்பரசன். இந்த விழாவில் சிறப்புரை ஆற்றினார் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சி.கே.ரங்கநாதன்.

பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்

இந்த விழாவில் ஏழு முக்கியமான தொழில் அதிபர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருதும் பிசினஸ் வெற்றியை வெவ்வேறு வகைகளில் எடுத்துச் சொல்வதாக இருந்தன.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிசினஸ் செய்பவர்கள், எம்.பி.ஏ படிக்கும் மாணவர்கள், எதிர்காலத்தில் பிசினஸ் செய்யவேண்டும் என்று நினைக்கிற அனைவரும் இந்த நிகழ்ச்சியைத் தவறாமல் பார்க்கலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.