தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி. இவர், பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிப்ளமோ ஹெல்த் கேர் படித்து வந்தார். அதே கல்லூரியில், கைலாசப்பட்டியைச் சேர்ந்த தீபா என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
தீபாவுக்கு, முத்துப்பாண்டி என்பவருடன் திருமணமாகி மூன்று மாத கைக்குழந்தை உள்ளது . ஆனாலும், தீபாவுக்கும் ஷாலினிக்கும் இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் தீபா, ஷாலினியை கைலாசப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அத்துடன், ஷாலினியின் தலைமுடி, உடை எல்லாம் மாற்றி அவரை ஆணாகவே மாற்றியுள்ளார். இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இந்த உறவு நீடிக்க, ஷாலினியை தனது தம்பி ஆனந்துக்கு திருமணம் செய்து வைக்க தீபா முடிவு செய்துள்ளார். திட்டமிட்டபடியே தனது தம்பி ஆனந்துக்கு ஷாலினியை திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு பின்னர், ஷாலினியும் தீபாவும் நெருங்கிப் பழகுவது ஆனந்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், தனது மனைவி ஷாலினியுடன் நெருங்கிப் பழகுவதைக் கண்டு சந்தேகம் அடைந்திருக்கிறார் தீபாவின் கணவர் . இதனால், மூன்று மாத குழந்தை தனக்கு பிறந்ததா அல்லது ஷாலினிக்கு பிறந்ததா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இதனால், தீபாவுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஷாலினியுடன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் தீபா. கணவரையும் கைக் குழந்தையையும் கைவிட்டு மாணவி ஷாலினி உடன் ஓடிப் போனதால் அதிர்ச்சி அடைந்த தீபாவின் தந்தை, இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்ததில், இருவரும் திருவாரூர் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.