காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்! சந்தேகநபர்கள் தொடர்பில் வெளியான தகவல்


காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகளத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான டிலான் சேனாநாயக்க மீதான தாக்குதல் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடக செயற்பாட்டாளர் திலான் சேனாநாயக்கவை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சிகிச்சை

நுகேகொட, பகொட வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு நென்று இருவர் அவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்! சந்தேகநபர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Four Arrested Attack Activist Dilan Senanayake

இந்நிலையில் காயமடைந்த டிலான் சேனாநாயக்க களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இத்தாக்குதலில் அவரது கால் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.