சேலம் மாவட்டத்தில் உள்ள குகை பஞ்சாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பதினான்கு வயது மகள், குகை பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திடீரென நேற்று மதியம் வீட்டிலிருந்து காணாமல் போனார்.
இதேபோன்று, குகையருகே பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு சிறுமியும் காணாமல் போயுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் காணாமல் போன இரண்டு சிறுமிகளும் ஈரோட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் படி, ஈரோட்டுக்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமிகளை மீட்டு, அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.