`நள்ளிரவு கைது, பொதுக்கூட்டத்துக்கு தடங்கல்!' – திமுக-வுக்கு எதிராக புகாரளித்த எம்.ஆர்.விஐயபாஸ்கர்

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த உறுப்பினர் திருவிக கடத்தப்பட்டது, அ.தி.மு.க உறுப்பினரை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு மிரட்டி, தி.மு.கவுக்கு வாக்களித்த வைத்தது என்ற கரூர் தி.மு.க-வினர் ஏக களேபரம் செய்ததாக, அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவு மூலம் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. தி.மு.க வேட்பாளர் தேன்மொழி 7 வாக்குகளையும், அ.தி.மு.க வேட்பாளர் 4 வாக்குகளையும் பெற்றதால், தி.மு.க வேட்பாளர் துணைத்தலைவராக வெற்றிப்பெற்றதாக, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரால் அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதை கண்டித்து வரும் 29-ம் தேதி கரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர் பிரிவினர் சகிதம் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

அ.தி.மு.கவினர்களோடு எம்.ஆர்.விஜயபாஸ்கர்

“கரூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த, தி.மு.க அராஜகத்துக்கு எதிரான அ.தி.மு.க நடத்த இருக்கும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தோடு, தொடர்ந்து அ.தி.மு.க-வினர் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. கரூரில் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலின்போது, முறைகேட்டில் ஈடுப்பட்ட தி.மு.க-வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினர் மீது மட்டும் வழக்கு பதிந்த கரூர் மாவட்டக் காவல்துறையினர், மாறாக பிரச்னை செய்த தி.மு.க-வினர் மீது மட்டும் வழக்குப் பதியவில்லை. மேலும், நேற்று நள்ளிரவில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரின் மகன் காவல்துறையினர் மூலமாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரைக் கைதுசெய்த போலீஸார் எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள்? யார் என்பது குறித்தும், கைதுசெய்யப்பட்ட நபர் இதுவரை எங்கு இருக்கிறார் என்பதும் குறித்த தகவல் தெரியவில்லை. இது குறித்து, கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க மாவட்ட அவைத் தலைவர் திருவிக-வை கடத்திய நபர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது வன்மையான கண்டனத்திற்குரியது. தொடர்ந்து, இதுபோன்ற செயல்கள் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.