தென் கொரியாவைச் சேர்ந்த ஷின் பயான்ங் மூன் என்ற நபர் குஜராத் மாநிலத்திற்கு சுற்றுலா வந்திருந்தார்.
வதோதரா பகுதியில் இவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை பார்க்க வந்த ஷின், உறவினர்களுடன் விசத்பூரா என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு பாராகிளைடிங் எனப்படும் வானத்தில் பலூன் மூலம் பறக்கும் சாகச விளையாட்டு பிரபலம். ஷின் பாராகிளைடிங் சாகச விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
ஷின் 50 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பராகிளைடர் சரியாக திறக்காதாதல், வானத்தில் இருந்து கீழே விழுந்த ஷின் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி ஷின்னின் உறவினர்கள் மற்றும் கொரிய தூதரகத்திற்கு தகவல் அனுப்பினர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in