
வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் அண்மையில் ஆலோசனை நடத்தினர்.அப்போது பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பண்டிகை காலம் வர உள்ளதால் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு அட்வைஸ் செய்யப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது:
- திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
- உணவகங்கள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
- புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணிக்குள் நிறைவடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகளால் பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.