அதிமுக எம்பி., எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகளுடன், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் இ.பி.எஸ். அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகள் இஷ்டத்திற்கு பேசக்கூடாது என அவர் அறிவுறுத்தியதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என திட்டவட்டமாக கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆலோசனைக்கு பின் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளுக்கு தமிழக அரசு முறையாக செலவிடவில்லை என குற்றஞ்சாட்டினார்.