ஜேர்மனியில் விலைவாசி உயர்வைத் தொடர்ந்து அதிகரித்துள்ள ஒரு குற்றச்செயல்


ஜேர்மனியில் எரிபொருள் விலை எந்த அளவுக்கு உயர்ந்துள்ளதோ அதற்கு இணையாக குற்றச்செயல் ஒன்றும் இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது.

எரிபொருள் மோசடி 

அதாவது, எரிபொருள் தொடர்பான மோசடியும் திருட்டுக் அதிகரித்துள்ளன. விளக்கமாகச் சொன்னால், எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமல் வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறார்கள் பலர்.

இம்மாதத்தில், Mecklenburg-Western Pomerania மாகாணத்தில், 1,811 அத்தகைய எரிபொருள் மோசடிகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 43% அதிகமாகும்.

ஜேர்மனியில் விலைவாசி உயர்வைத் தொடர்ந்து அதிகரித்துள்ள ஒரு குற்றச்செயல் | Fuel Fraud And Theft Rises Germany

anews

பெரும் இழப்பு 

இப்படி எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்பைவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு ஓடிவிடுவோரால் 137,700 யூரோக்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னொருபக்கம், எரிபொருள் திருட்டு முந்தைய ஆண்டைவிட 120% அதிகரித்துள்ளது. அதனால், சுமார் 485,000 யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.