இன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், “மதுரை வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், துபாயில் இருந்த வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஓவியத்திற்காக ரத்தம் பயன்படுத்தபடுவது பாதுகாப்பாக இல்லை. ‘பிளட் ஆர்ட்’ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரம். ஓவியத்திற்காக ரத்தம் எடுக்கும்போது, பாதுகாப்பற்ற முறையில் உள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
குறிப்பு : கொரோனவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவோம், சமூக இடைவெளியை பின்பற்றுவோம்!