டிசம்பர் 1: இன்று முதல் உங்கள் பட்ஜெட்டில் கூடுதல் செலவு கொடுக்கும் விஷயங்கள்

New Rules from December 1: மாதந்தோறும் முதல் தேதியன்று ஏற்படும் மாற்றங்களைப் போலவே, டிசம்பர் 1ம் நாளான  இன்று முதல் பல மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்களில் சில உங்களுக்கு பயனளிக்கும், சில உங்கள் மாதந்திர பட்ஜெட்டை அதிகரிக்கும். பொதுமக்களின் தினசரி வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய மாற்றங்கள். இன்று முதல் உங்களுக்கு கார் வாங்குவது விலை உயர்ந்ததாகிவிட்டது. டிசம்பர் 1 முதல்,  மூன்றாம் நபர் காப்பீடு தொடர்பான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காப்பீட்டு கட்டணத்தின் … Read more

திமுக மாவட்ட செயலர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: திமுக மாவட்ட செயலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை அறிவாலயத்தில், திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு, அக்கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. அதில், மக்களவை தேர்தல் தொடர்பாகவும், அதற்கான கூட்டணி திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இப்போதுள்ள கூட்டணியில், எந்த கட்சியை கூடுதலாக சேர்க்கலாம் என்பது குறித்து, முடிவு செய்யப்பட உள்ளது.

மணலி அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: மணலி அருகே ஆன்லைன் ரம்மியில் 50,000 பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மனைவி பெயரில், மகளிர் சுய உதவிக்குழுவில் பெற்ற கடனை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில்  தகவல் தெரியவந்துள்ளது.

தெலங்கானாவில் போலி சிபிஐ அதிகாரியை சந்தித்து பேசிய அமைச்சர், எம்பிக்கு சிபிஐ சம்மன்: இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

திருமலை: தெலங்கானா மாநில டிஆர்எஸ் கட்சி அமைச்சர் கங்குல கமலாகர், எம்பி வாவிராஜூ ரவிச்சந்திராவும் கிரானைட் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கங்குலா கமலாகர் துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது வீட்டில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  கரீம்நகரில் உள்ள அவரது வீடு பூட்டியிருந்த நிலையில், அமைச்சரை தொடர்பு கொள்ள முயன்று முடியாததால் வீட்டின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்து அதிரடியாக சோதனையிட்டனர். இதேபோல் ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள … Read more

கடலூர்: கார் கவிழ்ந்து விபத்து.! அய்யப்ப பக்தர்கள் 3 பேர் காயம்.!

கடலூர் மாவட்டத்தில் டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் மூன்று அய்யப்ப பக்தர்கள் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியில் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மகன் சரவணன் மற்றும் அவருடைய நண்பரான சென்னையைச் சேர்ந்த வாசுதேவன் ஆகியோர் கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். பின்பு அங்கிருந்து மீண்டும் விருத்தாச்சலம் நோக்கி நேற்று மாலை வந்து கொண்டிருந்தபோது, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியநாச்சி பேருந்து நிலையம் அருகே வந்த … Read more

பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழியை பாடமாக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுத் துவக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, தமிழகத்தினுடைய முதல் பெண் முதலமைச்சர் என்ற சிறப்புக்குரியர் அம்மையார் ஜானகி எம்.ஜி.ஆர்தான். எம்.ஜி.ஆர் இருபதாண்டு காலம் தி.மு.க.வில் இருந்தார். அதற்குப் பின்னால், காலத்தின் சூழ்நிலை கருதி ஒரு தனி இயக்கம் அவர் கண்டார். எம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. … Read more

`எதுவுமே நிஜமல்ல என்று நிரூபித்துக்காட்டினால்..!' – தொடரும் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட சர்ச்சை

`தி காஷ்மீர் ஃபைல்’ – 2022 பிப்ரவரியில், இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே சர்ச்சைகள் தொடங்கின. மார்ச் 11, 2022 அன்று உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியான பிறகு பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க-வினர் பலரும் இந்தப் படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. எதிர்க்கட்சியினரோ, “இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பிரிவினையைத் தூண்டுகிறது இந்தப் படம்” எனக் குற்றம்சாட்டினர். படம் வெளியான சில … Read more

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜனவரி 10-ம் தேதி நேரில் ஆஜராக திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சம்மன்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் ஜன.10-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னையில் உள்ளஎம்.பி., எம்எல்ஏக்கள் மீதானவழக்குகளை விசாரிக்கும் சிறப்புநீதிமன்றம் சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பின்னர் டெல்லி, சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் உட்பட ஆ.ராசாவுக்கு சொந்தமான … Read more