ஒவ்வொரு முறை வீடு மாறும்போது மின் இணைப்பு எண்ணை மாற்ற அலைய வேண்டுமா

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கும், குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளனர். மத்திய பாஜக அரசினைப்போல திமுக அரசும் மக்களின் தகவல்களை ஒவ்வொன்றாக ஆதார் எண்ணுடன் இணைக்க கட்டாயப்படுத்துவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்நுகர்வோராக உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இணைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது … Read more

தமிழகம் முழுவதும் 38 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 1983-ம்ஆண்டு முதல் 2021 வரை 38 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 1,635ஊழல் வழக்குகளை விரைந்துமுடிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துநராக பணியாற்றி கடந்த 2018-ல் ஓய்வு பெற்றவர் அண்ணாதுரை. இவர் உட்பட போக்குவரத்து கழக ஊழியர்கள் பலர் மீது கடந்த 2003-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்த ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. இதை … Read more

ராயல் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் இளவரசர் வில்லியமின் ஞானமாதா: இனவெறி கருத்துக்கு மன்னிப்பு

இளவரசர் வில்லியமின் ஞானமாதா லேடி சூசன் ஹஸ்ஸி இனவெறி சர்ச்சைகளில் சிக்கி கொண்டதை தொடர்ந்து தனது அரச கடமைகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அரச சேவையில் இருந்து ராஜினாமா மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உதவியாளராக இருந்த 83 வயதான லேடி சூசன் ஹஸ்ஸி, லண்டனைச் சேர்ந்த சிஸ்டா ஸ்பேஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் என்கோசி ஃபுலானியிடம் இனவெறியுடன் பல கேள்விகளை கேட்டு சர்ச்சை வெளியானதை தொடர்ந்து தனது மன்னிப்பை சூசன் ஹஸ்ஸி கோரியுள்ளார். அத்துடன் புதன்கிழமையன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் அவர் … Read more

ராம் சரண் நடிக்கும் பான் இந்தியா படம்

ஐதராபாத்: விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் சார்பில் தயாராகும் பான் இந்தியா படத்தில் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு ஆகியோர் இணைகின்றனர். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பான் இந்தியா படம், ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதுவும் பான் இந்தியா படமாக உருவாகிறது. ராம் சரண் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இதையடுத்து ராம் … Read more