குஜராத்தில் இன்று முதல்கட்ட தேர்தல்: 89 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து, 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல்கட்டமாக தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய, 19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் இன்று (டிச. … Read more

பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக மறுஆய்வு மனு

நியூடெல்லி: தன்னை பலாத்காரம் செய்த 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக பில்கிஸ் பானோ மனு தாக்கல் செய்துள்ளார். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, ​​தன்னைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மனு செய்துள்ளார். 1992 ஆம் ஆண்டு நிவாரண விதிகளைப் பயன்படுத்தி, 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. … Read more

உலக கோப்பையில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட மெஸ்ஸி: சூப்பர் 16-க்கு அர்ஜென்டினா தகுதி

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் போலந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 0-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. போலந்து 0-2 அர்ஜென்டினா உலக கோப்பை கால்பந்து தொடரில் புதன்கிழமையன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போலந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின.  போட்டியின் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அர்ஜென்டினா அணி பலமுறை கோல்களை அடிக்க முயற்சித்தது. ஆனால் முதல் பாதியின் முடிவில் இரண்டு அணிகளுமே கோல் போடாததால், ஆட்டத்தின் … Read more

டிசம்பர் 1: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 194-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 194-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிச-01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்தியாவுக்கு ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பு மனிதநேயத்தை மையமாக கொண்ட உலகை உருவாக்குவோம்: பிரதமர் மோடி அறிக்கை

புதுடெல்லி: ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்கும் கால கட்டத்தில் மனித நேயததை மையமாக கொண்ட உலகை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி 20 அமைப்பின் தலைமை என்ற முக்கியமான பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், ஜி-20 மேலும் சிறப்பாக செயல்பட முடியுமா? அடிப்படையான மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கிரியா ஊக்கியாக நாம் செயல்பட்டு ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயன் அளிக்க … Read more

மாணவியரை வெளுத்த ஆசிரியை மீது வழக்கு| Dinamalar

ஹைதராபாத் தெலுங்கானாவில், மாணவியரை ஓட ஓட விரட்டி பிரம்பால் விளாசித் தள்ளிய ஆசிரியை மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தெலுங்கானாவில் காமரெட்டி மாவட்டத்தின் மட்னுார் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவி, மொபைல் போனில் ஆசிரியையை படம் எடுத்தார். பின் அந்தப் படத்தை சமூக வலைதளத்தில், ‘போரிங் கிளாஸ்’ என தலைப்பிட்டு வெளியிட்டார். இந்த தகவல், ஆசிரியைக்கு நேற்று தெரிய வந்தது. இதையடுத்து, அவர் அந்த மாணவியுடன் அவருடைய வகுப்புத் … Read more

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை!

  மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் (29) பாராளுமன்றத்தில் தெரிவித்த பதில், அர்த்தத்தை சிதைக்கும் விதத்தில் பல ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியுள்ளன.எனினும், 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு நேற்று பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், மாகாண சபைகளில் … Read more

Aadhar Link: மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்; காஞ்சியை பின்பற்றுமா மற்ற மாவட்டங்கள்?

Aadhar Link: மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்; காஞ்சியை பின்பற்றுமா மற்ற மாவட்டங்கள்? Source link