தற்போது காலநிலை மாற்றம், தண்ணீர் தட்டுப்பாடு, உணவு பொருள்கள் தட்டுப்பாடு போன்ற காரணத்தினால், வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நுழையும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
கரடி, மான், யானை என வன விலங்குகள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று (ஜன. 1) அதிகாலை கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் திடீரென காட்டு யானை நடந்து வந்தது. பிரதான சாலையில் யானை உலா வந்தது. கோழிகளை ஏற்றி வந்த ஜீப்பை நடுரோட்டில் நிறுத்திய வாகன ஓட்டி யானையைக் கண்டதும் அலறி அடித்து வாகனத்தை அங்கேய விட்டு ஓடினார். வாகனத்தில் இருந்த மற்றொருவரும் ஓடினார்.
ஆனால், மற்றொரு நபரும் அந்த வாகனத்தில் சிக்கிக்கொண்டார். அதற்குள் யானை அந்த வாகனத்திற்கு அருகே வந்துவிட்டது. யானை அந்த வாகனத்தை நோட்டம்விட்டு, வாகனத்தின் முன்புறத்தை துதிக்கையால் முட்டி தள்ளிவிட்டுச் சென்றது.
எவ்ளோ பெரிய தந்தம்… ஜஸ்ட் மிஸில் தப்பியோடிய நபர் – நீலகிரியில் பரபரப்பு#Nilgiri | #Elephant | #ViralVideo | #ZeeTamilNews pic.twitter.com/CPbmBwtlwj
— NG Sudharsan (@NgSudharsan07) January 1, 2023
சுற்றி சுற்றி வந்தது. அந்த யானை ஒருபுறம் அந்த வாகனத்தை தாண்டி செல்ல, மறுபுறத்தில் அந்த நபர் வாகனத்தில் இருந்து தப்பித்து ஓடினார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி, ஊரின் முக்கிய சாலைகளிலும் யானை வலம் வரும் நிலையில், பல்வேறு சிசிடிவி காட்சிகள் அது பதிவாகியுள்ளது.
யானை மிகவும் அமைதியான விலங்காகக் கருதப்பட்டாலும், அது கோபமடைந்தால், காட்டில் பீதியை உருவாக்குகிறது. இதற்கு சான்றாக நாம் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் பார்த்திருக்கிறோம்.
இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே வைத்துள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல விஷயங்கள் குறித்து நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.
பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கையாகவும், பயத்தை ஏற்படுத்தும் வகையில் பல வீடியோக்கள் உள்ளன. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் இதுபோன்ற வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.