"பல மொழிப் படங்களில் நடித்தால் நான் மூழ்கிவிடுவேன் என நினைக்கிறார்கள்"- துல்கர் சல்மான்

குறுகிய காலத்திலேயே திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்த இளம் நடிகர் துல்கர் சல்மான். இந்த வருடம் இவர் நடிப்பில் தமிழில் ஹே சினாமிகா, மலையாளத்தில் சல்யூட், ஹிந்தியில் சப்: ரிவஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட், தெலுங்கில் சீதா ராமம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதில்  சீதா ராமம்  திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்திருந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட துல்கர் சல்மான், பல மொழி திரைப்படங்களில் நடிப்பதால் அவர் விமர்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து பேசிய அவர், “நான் என்ன செய்தாலும் மக்கள் அதற்கு ஒரு கருத்தைச் சொல்வார்கள். பொதுவாக நான் எந்த மாதிரியான படங்களில்  நடிக்க வேண்டும், வேண்டாம்  போன்ற எனது தொழில் குறித்த இலவச ஆலோசனைகளை வழங்க அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

துல்கர் சல்மான்

உதாரணமாக  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற நான்கு மொழி திரைத்துறையிலும் நான் படங்கள் பண்ணக்கூடாது என்றும் அப்படி பல மொழி திரைத்துறையில் நான் நடித்தால் மூழ்கிடுவேன் என்றும்  நினைக்கிறார்கள். எனக்கு சினிமா மீது ஆர்வமும் காதலும் இருக்கிறது. அனுபவங்களைத் தேடிச் செல்லும் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். வெவ்வேறு திரைத்துறைகளில் பணிபுரியும் போது பல்வேறு வகையான கலாசார அனுபவங்களைப் பெறுகிறேன். எங்கு சென்றாலும், என்னால் முடிந்த சிறந்த வேலையைச் செய்ய முயற்சிக்கிறேன். அது சரியோ தவறோ, ஆனால் நான் அதை உலகத்திற்காக மாற்ற மாட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.