2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தொடையூர் கிராமத்தில் நேற்று நள்ளிரவு பட்டியல் சமூக மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வைத்திருந்த கேக்கை அதே கிராமத்தை சேர்ந்த கமல், சரத்குமார் என்ற இளைஞர்கள் கேக்கை தள்ளிவிட்டு தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர்.

இதனையடுத்து இளைஞர்கள் இருவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.