மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்தவர் வழக்கு தொடுத்து இருந்தார். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து மனுதாரர் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மின்னிணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டால் தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிரிக்க கூடாது என தமிழக அரசு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.