சிவகங்கை மாவட்டத்தில் 15 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பின்பு காப்பகத்தில் இருந்து சிறுமியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி, யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புழுதிப்பட்டி போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.