சென்னை: தென்மாவட்டங்களில் ஏடிஎம் மையங்களில் தொடர்ந்து நூதன திருட்டில் ஈடுபட்ட பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பக்ருதீனிடம் இருந்து 63 ஏடிஎம் கார்டுகள், ரூ. 83ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பணம் வரவில்லை எனக்கூறி உதவி செய்வதாக நடித்து நூதன முறையில் பணத்தை திருடியது அம்பலமாகியுள்ளது.