புதுடில்லி : கடந்த ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31 ஆயிரம் புகார் மனுக்கள் வந்ததாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் ஆண்டு தோறும் அதிகரித்தபடி உள்ளன. இவை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்தாண்டு மட்டும் 31 ஆயிரம் புகார் மனுக்கள் வந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில், 30 ஆயிரத்து 864 புகார் மனுக்கள் வந்தன. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கூறியிருப்பதாவது:
கடந்தாண்டில் பெறப்பட்ட புகார் மனுக்களில் பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் குற்றங்கள் குறித்து 9710 புகார்கள் வந்துள்ளன.
அதற்கு அடுத்தபடியாக குடும்ப வன்முறை தொடர்பாக 6970; வரதட்சணை குறித்து 4600 புகார்களும் வந்துள்ளன. மொத்தமுள்ள புகார் மனுக்களில் 54.5 சதவீதம் உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து பெறப்பட்டுள்ளன.இவ்வாறு தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement