பனிப்புயல், கனமழை வெள்ளம்… நியூ இயரில் அமெரிக்காவுக்கு அடி மேல் அடி!

அமெரிக்காவில் கடந்த வாரங்களாக கடுமையான பனிப்புயல் வீசி வந்தது. இதனால் நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டிருந்தன. பிரதான சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்ததால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சூழல் நிலவியது. பனிப்புயலில் சிக்கி கலிஃபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் 60க்கும மேற்பட்டோர் பலியாகினர்.

பனிப்புயலின் தாக்கத்தால் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவில்லை. இதனால் மிகவும் ஏமாற்ற மனநிலையில் இருந்துவந்த அமெரிக்க மக்கள், குறைந்தபட்சம் ஆங்கில புத்தாண்டையாவது உற்சாகமாக கொண்டாடலாம் என்று எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் இதற்கு வழியில்லாதபடி, அங்கு பல்வேறு மாகாணங்களில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை கொ்ட்டித் தீர்த்து வருகிறது. டெக்சாஸ், கலிஃபோர்னியா, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்ததுவரும் கனமழையின் காரணமாக, மக்கள் இயல்பு வாழ்க்கை மீண்டும் முடக்கி போய் உள்ளது.

year ender 2022: உலகை உலுக்கிய, வியப்பில் ஆழ்த்திய நிகழ்வுகள் ஓர் மீள்பார்வை!

முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், புத்தாண்டும் அதுவுமாக பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோர மரங்கள் வேரோடு பெயர்ந்து வீழ்ந்துள்ள சாலையோர மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி பனிப்புயல், கனமழை, வெள்ளம் என்று புததாண்டு தருணத்தில் அமெரிக்காவுக்கு இயற்கை சீற்றத்தால் அடிமேல் அடி விழுந்து வருதால் அந்நாட்டு மக்கள் மிகவும் அப்செட் ஆகி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.