
கேரள மாநிலம் இடுக்கியில், பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம், இதேபோன்று நடந்த விபத்தில் 9 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.