சென்னை: தமிழகம் முழுவதும் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 27 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறைச் செயலர் க.பணீந்திரரெட்டி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: எஸ்.பி. நிலையில் இருந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பி.அரவிந்தன், வி.விக்ரமன், சஞ்சய் குமார் தாகூர், டி.மகேஷ் குமார், தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகிய 9 பேர், தேர்வு தர நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
இது தவிர, கூடுதல் டிஜிபி வன்னியபெருமாள், ஐஜிக்கள் அவினேஷ் குமார், தமிழ்ச்சந்திரன், சந்தோஷ் குமார், எஸ்.ராஜேஸ்வரி, என்.எம்.மயில்வாகனன், கார்த்திகேயன் (திருச்சி காவல் ஆணையர்), எஸ்.பி.க்கள் சியாமளா தேவி, எஸ்.மணி, மோகன்ராஜ், சீனிவாச பெருமாள், வி.வி.சாய் பிரனீத், டி.செந்தில்குமார், அதிவீரபாண்டியன், ரோகித் நாதன் ராஜகோபால், கே.மீனா, ஆதர்ஷ் பசேரா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தென் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் எஸ்.ராஜேந்திரன், திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். சில குற்றச்சாட்டுகளின் காரணமாக, ஒரு பெண் டிஐஜி, 2 ஐஜிக்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பெயர் புதிய பதவி மற்றும் பணியிடம்: 1. ஏ.அருண் கூடுதல் டிஜிபி, குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி 2. டி.கல்பனா நாயக் கூடுதல் டிஜிபி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு 3. சி.ஈஸ்வர மூர்த்தி கூடுதல் டிஜிபி, தமிழ்நாடு போலீஸ் அகாடமி (ஊனமாஞ்சேரி) 4. அவி பிரகாஷ் கூடுதல் டிஜிபி (மத்திய அரசு பணி) 5. வித்யா ஜெயந்த் குல்கர்னி கூடுதல் டிஜிபி (மத்திய அரசு பணி) 6. பிரவீன் குமார் அபிநபு ஐஜி, திருப்பூர் காவல் ஆணையர் 7. கே.எஸ்.நரேந்திரன் நாயர்ஐஜி, மதுரை காவல் ஆணையர் 8. ரூபேஸ் குமார் மீனாஐஜி, அமலாக்கம்
9. எம்.சத்திய பிரியா ஐஜி, திருச்சி காவல் ஆணையர் 10. விஜயேந்திர எஸ்.பிதாரி ஐஜி (மத்திய அரசு பணி) 11. சி.விஜயகுமார்டி ஐஜி, கோயம்புத்தூர் சரகம் 12. திஷா மித்தல் இணை ஆணையர், சென்னை கிழக்கு 13. எம்.துரை டிஐஜி, ராமநாதபுரம் சரகம் 14. ஜெ.மகேஷ் டிஐஜி, உளவு பிரிவு (பாதுகாப்பு) 15. அபினவ் குமார் டிஐஜி, திண்டுக்கல் சரகம் 16. எம்.ஆர்.சிபி சக்ரவர்த்தி இணை ஆணையர், சென்னை தெற்கு17. ஜியாஉல் ஹக் டிஐஜி, குற்றப்பிரிவு சிஐடி 18. பி.விஜயகுமார் டிஐஜி, ரயில்வே
19, பி.பகலவன் டிஐஜி, காஞ்சிபுரம் சரகம் 20. எஸ்.சாந்தி டிஐஜி, நிர்வாகம் 21. எம்.விஜயலட்சுமி டிஐஜி, ஆயுதப்படை 22. பா.மூர்த்தி இணை ஆணையர், தாம்பரம் காவல் ஆணையரகம் 23. டி.ஜெயச்சந்திரன் டிஐஜி, தஞ்சாவூர் சரகம் 24. எம்.மனோகர் டிஐஜி, தலைமையிடம் 25. ஜி.தர்மராஜன் டிஐஜி, மத்திய அரசு பணி 26. சமத் ரோகன் ராஜேந்திரா டிஐஜி, மத்திய அரசு பணி 27. என்.பாஸ்கரன்துணை ஆணையர், ஆவடி காவல் ஆணையரகம்