டெல்லி: மத்தியஅரசு கடந்த 2016ம் ஆண்டு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 4 பேர் செல்லும் என அறிவித்துள்ள நிலையில், பெண் நீதிபதி நாகராத்னா ஒருவர் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளார். கடந்த 2016ம் ஆண்டு மத்தியஅரசு திடீரென புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இது கருப்பு பணத்தை ஒழிக்கும் […]