வெளிநாட்டினர் சொத்துகள் வாங்க செக்… கனடா அரசு அதிரடி சட்டம்!

இந்தியர்கள் உள்ளிட்டோர் பணி நிமித்தமாக அதிகம் விரும்பி செல்லும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக தற்போது கனடா உள்ளது. அங்கு புதிய வேலைவாய்ப்புக்கான சூழலும், 2025 ஆம் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான வெளிநாட்டவரை பணியமர்த்தவும் கனடா நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதால், கனடா செல்லும் வெளிநாட்டவரின எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது ஒ!ருபுறம் இருக்க கனடாவில் வீடு, மனைகளின் விலை சமீபகாலமாக பல மடங்கு உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கட்டடங்களுக்கான வாடகையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதனால் கனடா நாட்டு குடிமக்கள் வீடு, மனை போன்ற அசையா சொத்துக்களை வாங்க முடியாமலும், வீட்டு வாடகை கொடுப்பதில் சிரமத்தையும் சந்தித்து வருகின்றனர். தங்கள் நாட்டு குடிமக்கள் சந்தித்துவரும் இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு, கனடா நாட்டு அரசு சட்டம் ஒன்றை இயற்றி உள்ளது.

வெளிநாட்டினர் இனி கனடாவில் சொத்துகளை வாங்குவதற்கு இந்த சட்டம் தடை விதிக்கிறது. இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக கனடா அரசு அதிரடியாக அறிவித்துள்ளதால், இனி வெளிநாட்டினர் அங்கு சொத்துகளை வாங்கி குவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2023ல் உலக பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும்: IMF தலைவர் எச்சரிக்கை!

இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதுநாள்வரை கனடாவில் பல லட்சம், கோடிகள் மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்து வந்தனர். தற்போது கனடா அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் வெளிநாட்டினர் இனி அங்குசொத்துகளை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.