புவனேஸ்வர்: ஒடிசாவில் ரஷ்ய நாட்டை சேர்ந்த மற்றொருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து மும்பை நோக்கி எம்.பி. அல்ட்னா என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. வழியில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்தது. இந்த கப்பலில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் அந்தக்கப்பலில் பணியாளர் ஒருவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இறந்தவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த மில்யாகோவ் செர்கேய்(51) என்பதும், அவர் கப்பலில் தலைமை பொறியாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தெற்கு ஒடிசாவின் ராயகடா நகரில், ரஷ்யாவை சேர்ந்த இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இது தொடர்பாக ஒடிசா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement