காதலருடன் புத்தாண்டு கொண்டாடிய தமன்னா!…

நடிகை தமன்னா கோவாவில் காதலருடன் புத்தாண்டு கொண்டாடிய காட்சிகள் வெளியாகி உள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. 10 ஆண்டுகளுக்கு முன் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என திரும்பிய பக்கமெல்லாம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.

இதனால் இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழிகளில் படு பிசியாக நடித்து வருகிறார். நடிகை தமன்னா அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. அந்த வகையில் தற்போது அவர் பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது.

இதனை உறுதி செய்யும் விதமாக சமீப காலமாக அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாகவே சுற்றி வருகின்றனர். இவர்கள் காதலிப்பதாக தகவல் பரவுவதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம் தான்.

நடிகை தமன்னா இந்த புத்தாண்டை கோவாவில் கொண்டாடினார். இதற்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவுநேர பார்ட்டியில் தமன்னா கலந்து கொண்டுள்ளார். புத்தாண்டு பிறந்ததும் அனைவரும் ஹாப்பி நியூ இயர் என ஆனந்தத்தில் கத்தியபோது எடுத்த வீடியோவில் நடிகை தமன்னாவும், விஜய் வர்மாவும் ஒருவரையொருவர் அன்புடன் அரவணைத்துக்கொள்ளும் காட்சி வெளியாகி உள்ளது.

இந்த காட்சிகள் வைரலானதை தொடர்ந்து தான் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், தற்போது டேட்டிங் செய்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.