டெல்லி: டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பெண்ணின் மரணத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம் எனவும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.