
விடுதலை படத்தின் ரிலீஸ் குறித்த விவரம்
'அசுரன்' படத்திற்குப் பிறகு விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதில் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஆகியோர் நடித்துள்ளனர் . ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இளையராஜா இசை அமைக்கிறார்.
இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து மற்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் முதல்பாகத்தை வரும் மார்ச் 31ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர். தொடர்ந்து சில மாதங்களில் ஜூலையில் இரண்டாம் பாகத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.