டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் விசாரணையை இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர். தொடர்ந்து, […]