அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லையா..! யாழில் அமைச்சர் கூறியுள்ள விடயம்


அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லை, ஆனால் தேர்தல் நடத்தப்பட
வேண்டுமா என்பதை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் தினத்தை தீர்மானிப்பது, தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது அல்லது தேர்தலுக்குரிய பணத்தினை எங்கே பெறுவது என தீர்மானிப்பது தேசிய
தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும்.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லையா..! யாழில் அமைச்சர் கூறியுள்ள விடயம் | Salary For Government Staffs Sri Lanka

ஆனால் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் என்று அறிவித்தால் தேர்தலுக்கு தயாராக
இருக்கின்றோம். தற்போது நாட்டை கொண்டு செல்ல பணம் இல்லை. அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட பணம் இல்லை.

நாட்டில் பணம் இல்லாத நிலை

பாடசாலை
மாணவர்களுக்கு தேவையான பாடசாலை சீருடை, பாடசாலை உபகரணங்களை கொள்வனவு
செய்யக்கூட பணம் இல்லை.

அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் போக்குவரத்து சேவை மற்றும் ஏனைய
செலவுகளை சமாளிப்பதற்கு கூட நாட்டில் பணம் இல்லாத நிலை காணப்படுகிறது.

சீரமைக்க
வேண்டிய பாதைகள் மற்றும் பழுதடைந்த பாதைகளை கூட திருத்த நிதி இல்லாத நிலையில்
தேர்தல் நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும்.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லையா..! யாழில் அமைச்சர் கூறியுள்ள விடயம் | Salary For Government Staffs Sri Lanka

தேர்தல் ஆணைக்குழு இவ்வாறான நிலையில் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்து
நிதியினை தேடி நடத்த தயாராக இருந்தால் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அதனை
நாங்கள் தீர்மானிக்க முடியாது தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க முடியும்
எனவும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.