டெல்லி: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என்றால் என்ன அர்த்தம் என இருதரப்பு வழக்கறிஞர்களிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என குறிப்பிட்டு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்த போது நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இருவரும் சொந்த ஊர்களின் பெயர்களை தங்கள் பெயருடன் இணைத்துள்ளார்கள் என வழக்கறிஞர்கள் பதில் அளித்தனர்.
