சென்னை: தமிழ்நாட்டில், ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் […]
