1,100 கி.மீ சைக்கிள் மிதித்து வந்த ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சல்லு பாய்!

ரசிகர்களாக இருக்கும் சாமானிய நபர்கள் திரைப் பிரபலங்களை சந்திப்பதெல்லாம் அனைவருக்குமே நடந்திடாத ஒன்றுதான். ஆனால் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு அது கைகூடியிருக்கிறது.

அதன்படி மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த சமீர் என்ற அந்த நபர் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சல்மான் கானை சந்திப்பதற்காக கிட்டத்தட்ட 1,100 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து மும்பை வந்திருக்கிறார்.

தன்னை தீவிர சல்மான் கான் ரசிகனாகவே அறிமுகப்படுத்தும் விதமாக சமீர் தன்னுடைய சைக்கிளில் சல்மான் கானின் ஃபோட்டோவையும் மாட்டி வலம் வந்திருக்கிறார். ஒருவழியாக மும்பை வந்த சமீருக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக எந்த நிகழ்வும் அரங்கேறவில்லை.

அதாவது, சல்மான் கான் தன்னுடைய வீட்டில் இருந்த போது அவரை சந்திக்க முற்பட்டிருக்கிறார் சமீர். இதனையடுத்து சல்மானை சந்தித்ததோடு அவரோடு ஃபோட்டோக்களையும் எடுத்து பூரிப்படைந்திருக்கிறார். இது தொடர்பான ஃபோட்டோக்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அதில், “ஹேப்பி பர்த்டே சல்மான் பாய். நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். இப்போது இருப்பது போல ஆரோக்கியமாகவும், உடற்கட்டுடனும் இருக்க வேண்டும். நானும் உங்களை பார்க்க விரும்புகிறேன்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.