50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!

பாகிஸ்தானியர் ஒருவர் 60வது முறையாக தந்தையான செய்தி மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் உள்ளார். 50 வயதான சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி, சமீபத்தில் ஒரு மகனை பெற்றெடுத்தார் மகனி பெயர் ஹாஜி குஷல் கான். 

குவெட்டா நகரின் கிழக்கு பைபாஸ் அருகே வசிக்கும் மருத்துவரான இவர், 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். 60வது குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் திளைத்த அவர், இப்போது நான்காவது பெண்ணைத் தேடுகிறார். ஏனெனில் அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மேலும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறார். 

மூன்று மனைவிகள் உள்ள நிலையில், நான்காவதாக ஒருவரை மணந்து கொண்டு, மேலும் அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு திட்டமிட்டு வருகிறார். குடும்ப மேலும் விரிவாக்கும் திட்டம் இருந்தாலும், கில்ஜி தனது குடும்பத்தினர் அனைவருடன் ஒரே வீட்டில் தங்கவே விரும்புகிறார். இதற்கிடையில், நாட்டில் பணவீக்க அளவு பெரிதும் அதிகரித்துள்ளது கில்ஜியை நிதி ரீதியாக பாதித்தது.

மேலும் படிக்க | கொடூர விபத்து! விமான இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த பணியாளர்!

“பாகிஸ்தானில், வணிகம் ஸ்தம்பித்துள்ளது. மாவு, நெய், சர்க்கரை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, நான் உட்பட, உலகம் உட்பட, அனைத்து பாகிஸ்தானியர்களும் சிரமங்களை எதிர்கொள்கிறோம்,” என்று சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி கூறினார். இருப்பினும், குடும்பத்தை விரிவுபடுத்தும் தனது தொட்டத்தில் உறுதியான அந்த நபர் தனது குழந்தைகள் மற்றும் மனைவிகளின் செலவுகளைச் சமாளிக்க முடிந்த அனைத்தையும் செய்ய தாயராக இருக்கிறார்.

கில்ஜி தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கும் நடவடிக்கைகளைப் பற்றி பேசுகையில், தனது குடும்பத்துடன் பயணம் செய்வதை விரும்புவதாகக் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, கில்ஜிக்கு தனது குடும்பத்தை ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்ல ஏராளமான வாகனங்கள் தேவைப்படுவதால் அவருக்கு அது சாத்தியமற்றதாகிவிட்டது. “அரசாங்கம் எனக்கு ஒரு பஸ் கொடுத்தால், என் குழந்தைகளை பாகிஸ்தானில் உள்ள இடங்களுக்கு எளிதாக அழைத்துச் செல்ல முடியும்,” என்று கூறிய அவர், தனது குழந்தைகளை நாடு முழுவதும் அழைத்துச் செல்ல வேண்டும் கனவு காண்கிறார்.

மேலும் படிக்க | மெக்கா மெதினா இடையிலான புல்லெட் ரயிலை ஓட்டி வரலாறு படைக்கும் பெண்கள்!

மேலும் படிக்க | IT Tax Returns: வருமான வரியை தாக்கல் செய்யவில்லையா? இந்த பாதிப்புகள் வரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.