இன்பநிதி போட்டோவை பற்ற வைத்தது இவரா..? திமுகவினர் ஷாக்..!

அமைச்சர்

மகன் இன்பநிதி வெளிநாட்டில் படித்து வருகிறார். இந்த நிலையில், இன்பநிதியை அடுத்த முதல்வராக அமைச்சர் பெருமக்கள் பேசி வருகின்றனர். சத்தியத்தை மீறி உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதே ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் அவரது இளம் வயது மகனை சின்ன ஜமீன்தாரர் என்று திமுக நிர்வாகிகள் பேசி வருவது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த சூழலில் வெளிநாட்டில் படித்து வரும் இன்பநிதி தனது தோழியுடன் நெருக்கமாக இருப்பதை போன்ற புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்களை யார் பகிர்ந்து என்ற விவாதம் எழுந்துள்ளது. மேலும், ஆங்கில எழுத்துடன் ஒரு எண் கொண்ட யூ டியூப் சேனலை நடத்தி வரும் திமுகவுக்கு நெருக்கமான யூடியூபர் ஒருவர்தான் அந்த புகைப்படங்களை போலியான கணக்குகள் மூலமாக வெளியிட்டார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

இன்பநிதியை வருங்கால தமிழக முதல்வர் என்று அமைச்சர்கள் பேசி வரும் சூழலில் இந்த புகைப்படம் வெளியாகி திமுகவுகாரர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உதயநிதியின் மனைவி கிருத்திகா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், ”நேசிக்கவும் அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம். இயற்கையை அதன் முழு மகிமையில் புரிந்துகொள்ள இதுவும் ஒரு வழி” என்று பதிவிட்டுள்ளார்.

மகனின் புகைப்படமும், பெயரும் சமூக ஊடகங்களில் அடிபட்டு வருவதால் அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அவர் அந்த ட்வீட்டை போட்டுள்ளாரா என்று தெரியவில்லை. இதற்கிடையே, அந்த புகைப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று திமுக ஆதரவாளர்கள் ட்வீட் போட, நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் இந்த விவகாரத்தில் இன்பநிதிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், இன்பநிதி அவரது தோழியுடன் இருக்கும் புகைப்படத்தை அண்ணாமலையின் குழுதான் வெளியிட்டுள்ளது. அதனால், அந்த பெண்ணையும் களங்கப்படுத்தியுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.