கோவையில் பழமையான கார்களின் அணிவகுப்பை கண்டு ரசித்த பொதுமக்கள்

கோயம்பத்தூர் : கோயம்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கோவை விழாவின் ஒரு பகுதியாக ரேஸ் கோஸ் சாலையில் உள்ள காஸ்மோ கிளப்பில் உள்ள பழங்கால கார், மற்றும் பைக் கண்காட்சி நடத்தப்பட்டது. கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு கோவை பந்தய சாலையில் உள்ள காஸ்மோக் கிளப் வளாகத்தில் பழங்கால கார், கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் துவக்கி வைத்துள்ளார்கள். இந்த கண்காட்சியில் கோவை, பல்லடம், திருப்பூர், அந்நூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்த்தவர் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சி படுத்தினர். இந்த கண்காட்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள், பைகள் இடம்பெற்று உள்ளன. சுதந்திரத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான கார்கள் முதல் 1980 ஆண்டு வரையுள்ள பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

பழைய மாடல் பென்ஸ், செவர்லெட், போர்ட், அம்பாசிட்டர் வோல்ஸ்வேகன் பழைய ஜீப் உள்ளிட்ட கார்களும் மற்றும் புல்லட், ஜாவா, ஸ்கூட்டர், உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இடம்பெற்றன. முன்னதாக கார்கள் அனைத்தும் ரேஸ் கோஸ் பகுதியில் வளம் வந்தன, பழைய கார்கள் அணிவகுத்து சென்றதே பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டுவருகின்றனர். தொடர்ந்து பழங்கால கார்கள் பொது மக்களின் பார்வைக்காக காஸ்மோக்  வளாகத்தில் மூன்று நாட்கள் வைக்கப்படும் என கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.     

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.