தொழில்நுட்ப காலத்தில் வாழ்ந்து வருகிறோம். நாளை மனிதர்களை போல ரோபோட்களும் உலா வரலாம். அவற்றுக்கு தகவல்களை கடத்துவதில் மனித மூளை முயன்று வருகிறது. தற்போது வெளிவரும் பல தொழில்நுட்பங்கள் மனிதர்களோடு உரையாடும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

அந்த வகையில் OpenAI என்ற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் 2022 நவம்பர் மாதத்தில் சாட் ஜிபிடி-ஐ (ChatGPT) அறிமுகப்படுத்தியது. இதை பயன்படுத்தி மனிதர்கள் உரையாடலை போல கேள்விகள் கேட்டு, பதில்களை பெறலாம்.
இந்நிலையில், பெங்களூருவிற்கு வந்த மைக்ரோசாப்டின் செயல் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா, தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அது நம் வாழ்வில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள சாட் ஜிபிடி (ChatGPT) யுடன் பேசினார். அப்போது,
`எதிர்காலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் தென்னிந்திய காலை உணவுகள் என்னவாக இருக்கும்’ எனக் கேட்டுள்ளார்.
`பிரியாணி’ என பதில் வந்துள்ளது.
`ஹைதராபாத்தை சேர்ந்தவன் என்பதற்காக, பிரியாணியை தென்னிந்திய காலை உணவு என மென்பொருள் ஒன்று கூறி என்னுடைய புத்திசாலித்தனத்தை அவமதிக்க முடியாது’ என்றார்.
அதற்கு சாட் ஜிபிடி `மன்னிப்பு’ கேட்டுள்ளது.

பிரியாணி என்பது அரிசி, காய்கறிகள், மசாலா, இறைச்சி சேர்த்து செய்யப்படும் உணவு. மிகவும் பிரபலமாக அறியப்படும் பிரியாணி, இந்தியாவின் பல பகுதிகளிலும் உண்ணப்பட்டு வருகிறது. ஆனால் அது காலை உணவு கிடையாது. இட்லி, தோசையே காலை உணவு என தொழில்நுட்பத்தில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தம் செய்தார்.
என்னதான் பிரியாணி பிடிக்கும் என்றாலும், காலை உணவில் பிரியாணியை சேர்க்க முடியாதல்லவா..