உணவுப் பாதுகாப்புப் பிரச்சினை எதிர்நோக்கப்பட்டுள்ள இந்த வேளையில் தேர்தலை நடத்துவதிலும் பார்க்க விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் தாம் கோருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் உற்பத்தி செய்துள்ள நெல்லை அரசாங்கம் வழமை போன்று நியாயமான விலைக்கு கொள்வனவு செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ,அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு இவ்வாறு குறிப்பிட்டார்.