பிரான்ஸ் மீண்டும் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்கள்: ஈரான் கடும் எச்சரிக்கை


ஈரான் உச்ச தலைவரை அவமதிக்கும் வகையில் பிரான்ஸ் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள கேலிச்சித்திரங்கள் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

கேலிச்சித்திரங்களால் உருவான சர்ச்சையால் பலியான உயிர்கள்

2015ஆம் ஆண்டு, முகமது நபியைக் குறித்து சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்கள் வெளியிட்டதாகக் கூறி, இரண்டுபேர் Charlie Hebdo என்னும் பிரெஞ்சு பத்திரிகை அலுவலகம் ஒன்றிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

அந்த பயங்கர சம்பவத்தில், புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டுகள் உட்பட அந்த பத்திரிகை அலுவலக ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டார்கள்.

பிரான்ஸ் மீண்டும் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்கள்: ஈரான் கடும் எச்சரிக்கை | Iran Issues Warning To France

மீண்டும் கேலிச்சித்திரங்களை வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஊடகம்

இந்நிலையில், தற்போது ஈரான் உச்ச தலைவரான அயத்துல்லா கோமேனியை அவமதிக்கும் வகையில் மீண்டும் Charlie Hebdo என்னும் அந்த ஊடகம் கேலிச்சித்திரங்கள் வெளியிட்டுள்ளது.

பிரெஞ்சு ஊடகம் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரங்கள் குறித்த பிரச்சினையை அப்படியே விடமாட்டோம் என்று கூறியுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சரான Hossein Amir-Abdollahian, அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக பிரான்ஸ் தூதரான Nicolas Rocheக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Nasser Kanani தெரிவித்துள்ளார்.

குர்திஷ் இனப்பெண்ணான Mahsa Amini ஈரான் பொலிசாரால் கொல்லப்பட்டதை எதிர்த்து ஈரானில் வெடித்துள்ள போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், Charlie Hebdo ஊடகம், ஈரான் அரசியல் தலைவர்கள் பலருடைய கேலிச்சித்திரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.