திருவண்ணாமலை பகுதியில் உள்ள எஸ்பி அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் ஆயுதப்படை காவலர் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் தமிழக காவலர் பல்பொருள் அங்காடி ஒன்று செயல்பட்டு வருகின்றது.
இந்த போலீஸ் கேண்டினில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இரு செல்போன்கள் மற்றும் மூன்று எல்இடி டிவிகள் களவு போய் இருக்கிறது. இது பற்றி திருவண்ணாமலை ஏ.டி.எஸ்.பி ஸ்டீபன் மற்றும் இதர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் இந்த பொருட்கள் அனைத்தையும் திருடி சென்றது சென்னை சிட்டி போலீசில் பணிபுரியும் சரத்குமார் என்ற 29 வயது நபர் என்பது தெரியவந்துள்ளது சரத்குமார் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் தாலுகா அல்லியாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்.
இதனை தொடர்ந்து சென்னைக்கு வந்த திருவண்ணாமலை தனிப்படை போலீசார் சரத்குமாரை கைது செய்து திருவண்ணாமலை அழைப்பு சென்றனர்.