
கோடிக்கணக்கான யூஸர்களால் உலகம் முழுவதும் ஒருநாளில் அதிகம் பயன்படுத்தப்படும் முன்னணி சர்ச் என்ஜினாக இருக்கிறது கூகுள். இன்டர்நெட்டில் எத்தனை சர்ச் என்ஜின்கள் இருந்தாலும், கூகுள் மட்டுமே மிகவும் பிரபலமாக உள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில், நம்மில் பெரும்பாலானோர், நமக்குள் எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஆன விடையை கூகுளில் தேடுகிறோம். அன்றாட செய்திகள், நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் என அனைத்தையும் வழங்கும் தகவல் களஞ்சியமாக இருக்கும் கூகுள், நமக்கு தகவல்களை அள்ளித் தரும் தளமாக இருக்கிறது. கூகுள் நிறுவனத்திடம் எந்த கேள்வி கேட்டாலும், அது உடனடியாக பதிலளிக்கும். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காவும், குற்றங்களை தடுக்கும் நோக்கத்திற்காகவும், தொழில்நுட்ப விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கூகுளில் எதையாவது தேடி, சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வெடிகுண்டு செய்வது எப்படி, பிரஷர் குக்கர் வெடிகுண்டு எப்படி செய்வது என்று கூகுளில் தேடக்கூடாது. அதேபோல், குழந்தைகளின் ஆபாசமான படங்கள் மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை வீடியோக்களை கூகுளில் தேடக்கூடாது. பெண்கள் கடத்தல், போதைப்பொருள் தகவல், கருக்கலைப்பு தொடர்பான தகவல்களை கூகுளில் தேடினால், போலீசார் விசாரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெடிகுண்டுகள் அல்லது துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கும் முறையைப் பற்றிய தகவல்களை நீங்கள் கண்டுபிடிக்க முயற்சித்தால், நீங்கள் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் பற்றிய தகவல்களைப் பெறுவது போன்ற தேடல்களை இந்திய அரசாங்கம் கண்காணித்து வருகிறது.