மறைந்த ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அஞ்சலி

மாரடைப்பால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நேற்று முதல் பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
image
இந்நிலையில், நேற்றிரவு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கேஎன்.நேரு, காந்தி, செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், மதிவேந்தன், சாமிநாதன் மற்றும் எம்பி. கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். மகனை இழந்து வாடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆறுதல் கூறினர். அதேபோல் இந்திய கம்யூ கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
image
இதைத் தொடர்ந்து கோபி சட்டமன்ற உறுப்பினர் கேஏ.செங்கோட்டையன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுததி வருகின்றனர். இன்று திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வர இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இன்று மதியம் கருங்கல்பாளையம் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.