ஹரி வெளியிடும் நினைவுக் குறிப்புகள்… கேட் மிடில்டனின் தலை மீது தொங்கும் கத்தி


இளவரசர் ஹரி தமது வாழ்க்கையில் இதுவரை நடந்த சம்பவங்களின் தொகுப்பை நினைவுக் குறிப்புகளாக வெளியிடவிருக்கும் நிலையில், குறித்த புத்தகத்தால் கேட் மிடில்டன் பெரும் இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உண்மையை அதேப்படி

இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்புகள் Spare என்ற தலைப்பில் ஜனவரி 10ம் திகதி வெளியாக இருக்கிறது.
குறித்த புத்தகத்தில் உண்மையை அதேப்படி உடைத்து பேசியுள்ளதாக ஹரி தெரிவித்துள்ளார்.

ஹரி வெளியிடும் நினைவுக் குறிப்புகள்... கேட் மிடில்டனின் தலை மீது தொங்கும் கத்தி | Prince Harry Memoir Kate Middleton Pay High Price

Image: ITV

மேலும், குறித்த புத்தகத்தால் ஹரி தமது சகோதரர் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனை குறிவைத்துள்ளதாகவும், மன்னர் சார்லஸ் மீது பெரிதாக விமர்சனம் வைக்கப்படவில்லை எனவும் விமர்சகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ராஜகுடும்பத்தில் இருந்து தொடர்புடைய புத்தகம் குறித்து எந்த ஒரு விமர்சனமும் முன்வைக்கப்படவில்லை.
ஆனால், புத்தகம் வெளியான பின்னர், மெளனம் காப்பது ராஜகுடும்ப உறுப்பினர்களுக்கு முடியாத நிலை ஏற்படும் எனவும்,

ஹரி வெளியிடும் நினைவுக் குறிப்புகள்... கேட் மிடில்டனின் தலை மீது தொங்கும் கத்தி | Prince Harry Memoir Kate Middleton Pay High Price

@getty

மோசமான விளைவுகள்

வில்லியம் மற்றும் ஹரி மனக்கசப்புகளை மறந்து சகஜமாக பழகுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அத்துடன் முடிவுக்கு வரும் எனவும் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானிய ராஜகுடும்பத்தினர் எதிர்பார்ப்பதைவிடவும் மிக மோசமான விளைவுகளை அந்த புத்தகம் ஏற்படுத்தும் என்றே விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வில்லியம் தாக்கியதால் காயங்களுடன் தமது மனைவி பக்கத்தில் சென்றதாக ஹரி கூறியுள்ளது, கண்டிப்பாக பூகம்பத்தை ஏற்படுத்தும் எனவும், இதன் பின்னர் சகோதரர்கள் இருவரும் முகம் பார்த்து பேசுவார்களா என்பது சந்தேகமே என்றார் இன்னொருவர்.

ஹரி வெளியிடும் நினைவுக் குறிப்புகள்... கேட் மிடில்டனின் தலை மீது தொங்கும் கத்தி | Prince Harry Memoir Kate Middleton Pay High Price

@pa

ஹரியின் நினைவுக் குறிப்புகளால் பெரும் இழப்பை எதிர்கொள்ள இருப்பது கேட் மிடில்டன் தான் என குறிப்பிட்டுள்ள ஒருவர், கேட் மிடில்டன் தலை மீது கத்தி ஒன்று தொங்கும் நிலை இது என்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.