உத்தர பிரதேசத்தில் உள்ள ஐலும்கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு நிறுத்தப்பட்ட தேசிய ஒற்றுமை யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது.
முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலிருந்து இந்த கிராமத்தை நேற்று காலை வந்தடைந்தார். இந்த யாத்திரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் பிரிஜ்லால் காப்ரி உள்ளிட்ட ஏராளமான முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.