கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில் வாடி மீன்பிடி தளத்திலிருந்து நேற்று காலை 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் தற்போது வரை கரைக்கு திரும்பாததால் சக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், இதுவரை மாயமான 4 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து மண்டபம் மீன்வளத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காற்றின் திசையில் படகு நகர்ந்து இலங்கை கடல் பகுதிக்குள் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.