வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: சூடானின் அபெய் பகுதியில், ஐ.நா.,வின் இடைக்கால பாதுகாப்பு படையின் முற்றிலும் பெண்களை கொண்ட இந்திய அமைதிப்படையினர் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதன் மூலம், 2007 க்கு பிறகு, ஐ.நா., பணியில் ஈடுபடும், பெண்கள் மட்டுமே இடம்பெற்ற மிகப்பெரிய அமைதிப்படையினர் என்ற பெருமை இவர்களுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2007 ல் லைபீரியாவில் பெண்கள் மட்டும் இடம்பெற்ற பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
ஐ.நா., பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ், பெண்கள் மட்டும் இடம்பெற்ற அமைதிப்படையினர் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இவர்கள் லைபீரியா போலீசுடன் இணைந்து, பாதுகாப்பு பணி , இரவு நேர ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

தற்போது, சூடானில் பணிக்கு செல்லும் பாதுகாப்பு படையினரில், பெண் வீராங்கனைகளுடன், 2 உயர் அதிகாரிகள், 25 மற்ற அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட உள்ளனர். சமீபத்தில் சூடானின் அபெய் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இச்சூழ்நிலையில், இந்த படையினரின் பணி அங்கு வரவேற்பை பெரும் என ஐ.நா., நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் அமைதிப்படையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற இந்தியாவின் நோக்கத்தையும் உணர்த்துகிறது எனவும் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement