சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து சென்னை மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டத்தை நினைவுகூறும் வகையில், மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற “பாரத் ஜோடோ யாத்திரையில்” கலந்துகொண்டபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக சென்னை அடையாறில் மக்கள் நீதி மன்றத்தின் நிர்வாகிகள் கூட்டம் கிராமிய இசை நிகழ்ச்சிகளுடன்நடைபெற்றது. இந்த நிகழ்வில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பாரத் ஜோடோ யாத்திரையில் நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. […]
