டெல்லி: 44 நீதிபதிகள் நியமனத்துக்கு சனிக்கிழமைக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்தியஅரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற கொலிஜிய பரிந்துரைத்த 104 நீதிபதிகளின் பட்டியல் மத்தியஅரசின் ஆய்வில் உள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படுவது குறித்து, நீதிபதிகள் எஸ்கே கவுல், அபய் எஸ்.ஓகா அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அபோது, உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான காலக்கெடுவைக் கடைப்பிடிப்பதாக உச்சநீதிமன்றம் […]
